Sri Periyanambi / ஸ்ரீ பெரியநம்பி பராங்குச தாசர் திருமாளிகை, மன்னார்கோவில்
படித்த இளைஞர்கள் பலரும் இன்று வேலை வாய்ப்பை எதிர்பார்த்து நகரங்களுக்கு புலம் பெயர்கின்றனர். அவரவர்கள் ஊருக்கு அருகிலேயே IT வேலை கிடைத்தால் ? அந்த வாய்ப்பினை ஏற்படுத்திவரும் எளிமையான அடக்கமான மனிதர், ZOHO மென்பொருள் நிறுவன தலைவர் CEO திரு ஶ்ரீதர் வேம்பு அவர்கள், இன்று திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வேதபுரி மன்னார்கோயில் ஶ்ரீ ராஜகோபாலப் பெருமாள் கோயிலுக்கு வருகை தந்தார். நம் ஆசார்யன் பெரியநம்பி ஶ்ரீ உ வே நரசிம்ம கோபாலன் ஸ்வாமியிடம் ஆசீர்வாதம் பெற்றார். அறம் செய விரும்புவோம் ! நல்லதே நடக்கும்
(Padmashree) Sri.Sridhar Vembu ji, CEO of Zoho took blessings from Thirunelveli Ambasamudram Mannarkoyil Sri U Ve Periyanambi Narasimha Gopalan Swami on 26th Jan 2021 on the occasion of Thai Thiruvaadhirai Sri Kulasekara Azhwar Pushpa pallakku purappaadu ! All glories to Swami Ramanujacharya !
 
தமிழ் வேதமான நாலாயிர திவ்ய ப்ரபந்ததில் “ஊனேறு செல்வத்து” பதிகத்தில் வரும் “ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்” என்னும் குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழிப் பாசுரத்தை ஶ்ரீ பெரிய நம்பி ஸ்வாமி விளக்கிக் கூறினார்.
 
“வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து (அதிகாரம்: ஈகை,221) என்னும் குறளையும் வலியுறுத்தி ஸ்வாமிகள் ஆசி வழங்கினார்.
விளக்கம் : வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.
 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !